பிரிட்டனில் முதல்முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை

பிரிட்டனில் முதல்முறையாக, பெண் ஒருவருக்கு கர்ப்பப்பை மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த 34 வயது பெண்மணிக்கு, அவரது 40 வயது சகோதரியிடம் இருந்து கர்ப்பப்பை மாற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிறைவடைந்து 2 பேரும் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பப்பை மாற்றப்பட்ட பெண், இவ்வருடத்தில் செயற்கை கருத்தரிப்பு முறையில் சிகிச்சை பெற உள்ளார். ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள அவரது கருமுட்டை மற்றும் அவரது கணவரின் விந்தணுக்கள் மூலம் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

பிரிட்டனில் முதல்முறையாக, பெண் ஒருவருக்கு கர்ப்பப்பை மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த 34 வயது பெண்மணிக்கு, அவரது 40 வயது சகோதரியிடம் இருந்து கர்ப்பப்பை மாற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிறைவடைந்து 2 பேரும் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்ப்பப்பை மாற்றப்பட்ட பெண், இவ்வருடத்தில் செயற்கை கருத்தரிப்பு முறையில் சிகிச்சை பெற உள்ளார். ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள அவரது கருமுட்டை மற்றும் அவரது கணவரின் விந்தணுக்கள் மூலம் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக நடத்தப்பட்ட கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையில் 20 மருத்துவர்கள் ஈடுபட்டனர். சுமார் 17 மணி நேரத்திற்கு இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், அளப்பற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளதாக குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu