தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்குகிறது.
மு.க ஸ்டாலின் தலைமையில் நேற்று மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கூறியதாவது,
கலைஞர் உரிமை திட்டத்தின் தொடக்கம் வரும் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்ட அமைச்சர் முன்னிலையிலும் இவை நடைபெற இருக்கிறது. அதேபோல் ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாயை ஆண்டுதோறும் பெற போகிறார்கள். மேலும் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும், இது அதிக பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் அமைந்துள்ளது. இத்திட்டத்தை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பும்,கடமையும் அதிகாரிகளுக்கு இருக்கிறது.
இதில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டுகள் முதல் கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. பயனாளிகள் பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. இதில் ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்கள் பல கலந்து கொண்டனர்.