சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு தூக்கு தண்டனை

July 29, 2023

சிங்கப்பூரில் சரிதேவி டிஜமாணி என்ற பெண் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று தூக்கிலிடப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. போதை பொருள் கடத்தல் என்பது அங்கு மிகப் பெரிய குற்றமாகும்.இதனை ரத்து செய்ய வேண்டும் என ஐ.நா சபை, சர்வதேச மனித உரிமை ஆளுநர் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது 31 கிராம் ஹெராயின் கடத்தியதாக 45 வயதுடைய சரிதேவி டிஜமாணி என்ற பெண் […]

சிங்கப்பூரில் சரிதேவி டிஜமாணி என்ற பெண் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று தூக்கிலிடப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. போதை பொருள் கடத்தல் என்பது அங்கு மிகப் பெரிய குற்றமாகும்.இதனை ரத்து செய்ய வேண்டும் என ஐ.நா சபை, சர்வதேச மனித உரிமை ஆளுநர் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் தற்போது 31 கிராம் ஹெராயின் கடத்தியதாக 45 வயதுடைய சரிதேவி டிஜமாணி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் 2018 ஆம் ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க அந்த நாட்டின் அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து மேல் முறையீடு கடிதம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் ஐநா அமைப்புகள் மூலம் இந்த பெண்ணின் தூக்கு தண்டனை ரத்து செய்ய சிங்கப்பூர் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது. போதை பொருள் பயன்பாட்டை தடுக்க தூக்கிலிடுதல் அவசியம் என சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் சரி தேவிக்கு நேற்று தூக்கு தண்டனை விதித்தது. இதற்கு முன்னதாக 2004 ஆம் ஆண்டு மே வொன் என்ற பெண் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu