உலக வரலாற்றில் முதல் முறையாக, வாடிகன் கூட்டத்தில் பெண்கள் வாக்களிக்க உள்ளனர்.வாடிகன் கூட்டத்தில், நீண்ட காலமாக ஆண்கள் மட்டுமே வாக்களித்து வருகின்றனர். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற குரல் பல ஆண்டுகளாக ஒலித்து வருகிறது. அதனை, தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் வாடிகன் கூட்ட வாக்கெடுப்பு சாத்தியப்படுத்த உள்ளது. அதன்படி, 2000 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே வாக்களித்த நிகழ்வில், பெண்கள் பங்கேற்கின்றனர். அக்டோபர் 29 ஆம் தேதியுடன் நிறைவடையும் இந்த கூட்டத்தில், 54 பெண்கள் வாக்களிக்கின்றனர். இவர்கள் தவிர, 365 பிஷப்புகள் வாக்களிக்க உள்ளனர். இந்த கூட்டத்தில், விவாகரத்து மற்றும் மறுமணம் செய்தவர்களுக்கான சடங்குகள், தேவாலயங்களில் பெண்களின் பங்கு, ஓரினச் சேர்க்கையாளர்கள் உறவு, திருமணமான பாதிரியார்கள் ஆகியோர் குறித்த ஆலோசனைகள் நடைபெறுகிறது.














