மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் நியூஸ்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அலிசா ஹீலி 26 ரன்னும், பெத் மூனி 40 ரன்னும் ஆட்டமிட்டனர். பிறகு, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 149 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் 19.2 ஓவர்களில் 88 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனார்கள். இதன் மூலம் ஆஸ்திரேலியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.