மகளிர் ஆசிய கோப்பை தொடரில் 6 ஆவது லீக் ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஒன்பதாவது மகளிர் ஆசிய கோப்பை தொடரின் 6 ஆவது லீக் ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நேபாளம் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் வெறும் 11.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து பாகிஸ்தான அணி எளிதில் வெற்றி பெற்றது.