தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும்மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதில் தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விண்ணப்பம் செய்தவர்களில் 57 இலட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மனு நிராகரிக்கப்பட்ட காரணம் குறித்த குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டிருந்தது. நிராகரிக்கப்பட்ட காரணத்தை அறிந்த பொதுமக்கள் அதுகுறித்து மேல்முறையீடு செய்தனர். இதில் 11,85,000 பேர் முறையீடு செய்து இருக்கின்றனர். தற்போது மேல்முறையீடு செய்தவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் தகுதியானவர்களுக்கு இப்போது செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் கட்டத்திட்டத்தை 10ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.