பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி அணியில் இந்திய அணி 12-0என கனடாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சிலி நாட்டில் சாண்டியாகோ நகரில் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதில் தனது முதல் போட்டியை இந்தியா கனடாவுடன் எதிர் கொண்டது. இதில் கனடாவை 12-0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து அட்டாக்கிங் அணு முறையில் விளையாடிய போது முதல் கால் பகுதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்க இயலவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் பாதி நேரம் ஆட்டத்தில் 4-0 என முன்னிலை பெற்றனர். அதன் பின்னர் கடைசியாக 12-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதில் நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜெர்மனியை எதிர்கொள்ள உள்ளனர்.














