மகளிருக்கான ஐந்தாவது ப்ரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மகளிருக்கான ஐந்தாவது புரோ ஹாக்கி தொடரில் பங்கேற்றுள்ளன. இந்த தொடரின் சில லீக் ஆட்டங்கள் ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி சீனா, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை கண்டுள்ளது. தற்போது இன்று இந்திய அணி அமெரிக்காவுடன் மோத உள்ளது.














