பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு

பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய அணி அறிவிக்கப்பட்டு, ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக, நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஹேமலதா அணியில் இடம் பெற்றுள்ளார்.அதன்படி இந்திய அணியில் ஹர்மன் பிரீத் கவுர் (கேப்டன்),ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்),ஷபாலி வர்மா,தீப்தி சர்மா,ஜெமிமா ரோட்ரிக்ஸ்,ரிச்சா கோஷ் (விக்கெட் […]

பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய அணி அறிவிக்கப்பட்டு, ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக, நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஹேமலதா அணியில் இடம் பெற்றுள்ளார்.அதன்படி இந்திய அணியில் ஹர்மன் பிரீத் கவுர் (கேப்டன்),ஸ்மிரிதி மந்தனா (துணைக் கேப்டன்),ஷபாலி வர்மா,தீப்தி சர்மா,ஜெமிமா ரோட்ரிக்ஸ்,ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்),யாஸ்திகா பாட்டி (விக்கெட் கீப்பர், உடற்தகுதி சான்றிதழ்),பூஜா வாஸ்த்ரகர்,அருந்ததி ரெட்டி,ரேனுகா சிங் தாகூர்,தயாளன் ஹேமலதா,ஆஷா சோபனா,ராதா யாதவ்,ஷ்ரேயங்கா பாட்டீல் (உடற்தகுதி சான்றிதழ்),சஜனா சஜீவன் இடம்பெற்றுள்ளனர். மேலும்
குரூப் ஏ பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. அதே பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu