மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியின் 18-வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது. பின்னர் 152 ரன்கள் இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணி 142 ரன்களை மட்டுமே எடுத்ததால், ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது, ஆஸ்திரேலிய அணியின் 15-வது வெற்றியாகும். இதன் மூலம் அவர்கள் 9வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.