மகளிர் மதிப்பு திட்டம்' என்ற சிறுசேமிப்புத் திட்டம் வரும் மார்ச் 31 ஆம் தேதி முடிவடைகிறது.
மத்திய அரசின் நிதி அமைச்சகம் 2023 மார்ச் 31-ந்தேதி 'மகளிர் மதிப்பு திட்டம்' என்ற சிறுசேமிப்புத் திட்டத்தை தொடங்கியது. இதில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 18 வயதுக்குள் உள்ள பெண் குழந்தைகள் உரிய பாதுகாவலர்களின் மூலமாக சேமிப்பு கணக்கு தொடங்க முடியும். இதில், ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். திட்டம் 2 ஆண்டுகளில் முதிர்வடையும்.
சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி. நடராஜன், இதுவரை 94,900 கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.843 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 31-ந்தேதி வரை இதன் பயன்பாட்டிற்கு அவகாசம் உள்ளதால், பெண்கள் மற்றும் பெற்றோர் அருகிலுள்ள அஞ்சலகங்களை அணுகி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.