பெண்கள் உலகக் கோப்பை செஸ் – திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை

ஜார்ஜியாவின் பதுமி நகரில் நடைபெற்ற 3-வது பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் மோதினர். முதல் இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்ததால் டைபிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. அதில் திவ்யா சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளார். […]

ஜார்ஜியாவின் பதுமி நகரில் நடைபெற்ற 3-வது பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் மோதினர். முதல் இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்ததால் டைபிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. அதில் திவ்யா சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளார். கோனெரு ஹம்பி இரண்டாம் இடத்தில் இருந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய செஸ் வரலாற்றில் இது முக்கியமான வெற்றியாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu