தங்களிடம் உள்ள பயனர் தகவல்களை செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முக்கிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
வேர்ட்பிரஸ், டம்ளர் போன்ற நிறுவனங்களின் தாய் நிறுவனம் ஆட்டோமேட்டிக் என்பதாகும். இந்த நிறுவனம், ஓபன் ஏஐ மற்றும் மிட்ஜர்னி போன்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பயனர் தகவல்களை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு பயிற்சிக்கு தேவையான தகவல்கள் கிடைக்கின்றன. ஏற்கனவே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் டீப் ஃபேக் சர்ச்சைகள் அதிகரித்து வரும் சூழலில், ஆட்டோமேட்டிக் நிறுவனத்தின் இந்த முடிவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், பயனர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே அவர்களின் தகவல்கள் பகிரப்படும் என ஆட்டோமேட்டிக் தெரிவித்துள்ளது. ஆட்டோமேட்டிக் நிறுவனத்தை தொடர்ந்து, வேறு சில நிறுவனங்களும் தங்கள் பயனர் தகவல்களை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.