அமெரிக்கா - கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கான பணிக் காலம் 5 ஆண்டுகளாக நீட்டிப்பு

October 13, 2023

அமெரிக்காவில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கான பணிக் கால அவகாசம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கான பணி அங்கீகாரம் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதனை மீண்டும் நீட்டிக்க கோரி விண்ணப்பிக்க வேண்டும். தற்போது, இந்த 2 ஆண்டு கால அவகாசத்தை 5 ஆண்டுகளாக உயர்த்தி, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி முதல் கிரீன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த கால அவகாசம் […]

அமெரிக்காவில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கான பணிக் கால அவகாசம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கான பணி அங்கீகாரம் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதனை மீண்டும் நீட்டிக்க கோரி விண்ணப்பிக்க வேண்டும். தற்போது, இந்த 2 ஆண்டு கால அவகாசத்தை 5 ஆண்டுகளாக உயர்த்தி, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி முதல் கிரீன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த கால அவகாசம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கிரீன் கார்டு விண்ணப்பங்கள் அதிக எண்ணிக்கையில் நிலுவையில் உள்ளன. எனவே, இந்த கால அவகாச நீட்டிப்பு வரவேற்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu