உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இருந்த 41 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் கடந்த 12ஆம் தேதி ஏற்பட்ட திடீர் விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 17 வது நாளான நேற்று துளையிடும் பணி நிறைவடைந்தது. இதன் மூலம் 41 தொழிலாளர்களும் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அனுப்பப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களை அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.














