2024 ஆம் நிதி ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% அளவில் இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.கடந்த 2022 டிசம்பரில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% ஆக கணிக்கப்பட்டது. அதுவே, கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.3% ஆக குறைக்கப்பட்டது. தற்போது, அதனை அதே விகிதத்தில் நீட்டிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதாரம் சீராக உள்ளதாக கூறியுள்ளது. ஆனால், சர்வதேச அளவில் தொடர்ந்து பொருளாதார மந்த நிலை நிலவும் என்றும், வட்டி விகிதங்கள் உயரும் நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.