2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% அளவில் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கணிப்பை விட 1.2% உயர்வாக தற்போதைய கணிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6% அளவில் இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 2 ஆண்டுகளில், உலக அளவில் வேகமான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்யும் பகுதியாக தெற்காசியா இருக்கும். 2025 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சி 6.1% அளவில் இருக்கும். அதில் பெரும்பான்மையாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருக்கும். இந்தியா 7.5% , வங்கதேசம் 5.7% , பாகிஸ்தான் 2.3% , இலங்கை 2.5% அளவில் வளர்ச்சியை பதிவு செய்யலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.