வரும் 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. முன்னதாக, 6.6% ஆக இது கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் முதல், இந்தியாவில், வட்டி விகிதங்கள் 250 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன. எனவே, அதனை கருத்தில் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கணிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கும் எனவும் கூறியுள்ளது.
மேலும், நடப்பு ஆண்டில், இந்தியாவின் வளர்ச்சி 6.9% ஆக கணிக்கப்பட்டிருந்தது. தற்போது 2.1% வளர்ச்சி பற்றாக்குறையை இந்தியா பதிவு செய்யும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், பெரிய அளவில் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்காது எனவும் கூறியுள்ளது.