நிகழும் 2025 ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 6.6% அளவில் இருந்து 7% ஆக உயர்த்தி உலக வங்கி அறிவித்துள்ளது.
கடந்த காலாண்டில் இந்தியாவில் நாடு தழுவிய தேர்தல் நடைபெற்றது. அதன் போது, அரசின் செலவுகள் குறைந்தது. இதனால், கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 6.7% ஆக குறைந்துள்ளது. இருந்தபோதிலும், இந்தியாவின் இடைக்கால வளர்ச்சி அடுத்த 2 நிதியாண்டுகளில் சராசரியாக 6.7% அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் முதலீடு நுகர்வு மீட்சியை ஊக்குவிக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இருப்பினும், 17% அளவில் உள்ள நகர்ப்புற வேலையின்மை போன்ற சவால்கள் வளர்ச்சியை பாதிக்கும் அம்சங்களில் குறிப்பிடத்தக்கவை என்று கூறியுள்ளது. உலக வங்கி அறிக்கையின்படி, உலகளாவிய வளர்ச்சி, பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைகளுக்கு கீழே இருக்கும் என்று கருதப்படுகிறது.