உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்தங்கியிருந்த கௌதம் அதானி, தற்போது 19 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. அதை தொடர்ந்து, அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அண்மையில், தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, ‘ஹிண்டன்பர்க் அறிக்கை முற்றிலும் உண்மை என ஏற்றுக்கொள்ள முடியாது’ என தெரிவித்து, வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, அதானி குழும பங்குகள் தொடர் உயர்வை பதிவு செய்து வருகின்றன. இதன் விளைவாக, கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 53.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதன்படி, அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 19 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.