உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நகர் பாகுவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி மேக்னஸ் கார்ல்சென் மற்றும் பிரக்ஞானந்தா இடையே நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்த நிலையில் நேற்று இறுதிச்சுற்றில் டைப்பிரேகர் ஆட்டம் நான்கு மணி நேரம் நீடித்தது. ராபிட் முறையில் இரண்டு ஆட்டங்கள் தொடரப்பட்டது. இதில் இரண்டாவது சுற்றின் 22 வது காய் நகர்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள இருவதும் சம்மதித்ததன் அடிப்படையில் மேக்னஸ் கார்ல்சென் 1.5 - 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதுவரை இவர் உலக கோப்பை சாம்பியன் பட்டம் ஐந்து முறை பெற்றாலும் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ரூபாய் 91 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இதில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்து ரூபாய் 67 லட்சம் பரிசுத்தொகையுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.