இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி,இறக்குமதி சதவீதம் கடந்த ஜூன் மாதத்தில் குறைந்துள்ளது.
இந்தியா கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 182.70 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 7 .29 சதவீதம் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 69.20 அமெரிக்கா டாலர் அளவில் ஏற்றுமதி செய்திருந்த இந்தியா இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 60.09 அமெரிக்க டாலர் அளவில் ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 13 சதவீதம் குறைந்துள்ளது
அதேபோல் கடந்த 2022 ஜூன் மாதத்தில் 80.12 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்தது. தற்போது ஜூன் மாதம் 14 சதவீதம் குறைந்து 68.98 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்துள்ளது. ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலான வித்தியாசம் 10.92 பில்லியனில் இருந்து 8.89 பில்லியன் ஆக குறைந்துள்ளது. மேலும் உலகளாவிய பொருளாதாரம் மந்த நிலை இந்த குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது.