உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் - பின்லாந்து 6வது வருடமாக தொடர்ந்து முதலிடம்

March 21, 2023

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில், பின்லாந்து தொடர்ந்து 6வது வருடமாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, நேற்று, ஐநா சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகளுக்கான அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 150 உலக நாடுகளை சேர்ந்த மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக ஆதரவு, உடல் நலம், சுதந்திரம், லஞ்சம் ஊழல் இல்லாத நிலை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மகிழ்ச்சி அளவிடப்பட்டுள்ளது. […]

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில், பின்லாந்து தொடர்ந்து 6வது வருடமாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, நேற்று, ஐநா சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகளுக்கான அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 150 உலக நாடுகளை சேர்ந்த மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக ஆதரவு, உடல் நலம், சுதந்திரம், லஞ்சம் ஊழல் இல்லாத நிலை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மகிழ்ச்சி அளவிடப்பட்டுள்ளது. இதில், பின்லாந்து முதல் இடத்தையும், டென்மார்க் இரண்டாம் இடத்தையும், ஐஸ்லாந்து மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளன. மேலும், முதல் 20 இடங்களை ஏற்கனவே அந்த இடங்களில் இருந்த நாடுகள் ஆக்கிரமித்துள்ளன. புதிதாக, லித்துவானியா 20ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தியா, இந்த பட்டியலில் 125 வது இடம் பிடித்துள்ளது. மேலும், அண்டை நாடுகளான நேபாளம், சீனா, வங்கதேசம், இலங்கையை விட இந்தியா இந்த பட்டியலில் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலின் இறுதியாக, 137-ம் இடத்தில், ஆப்கானிஸ்தான் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu