உலக பாரா தடகள சாம்பியன்ஸ் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவு பந்தயத்தில் 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
ஜப்பானில் உலக பாரா தடகள சாம்பியன்ஸ் 2024 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவு பந்தயத்தில் 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தீப்தி ஜீவன் ஜி இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இவரை தொடர்ந்து துருக்கியின் அய்சல் ஒன்டர் இரண்டாவது இடத்தையும், ஈக்வடாரின் லிசான் ஷெலா அங் குளோ மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதற்கு முன்னதாக தீப்தி ஜீவன் ஜி தகுதி சுற்றில் பெண்கள் 400 மீட்டர் டி20 ஹீட் பைனலுக்கு தகுதி பெற்றதன் மூலம் புதிய ஆசிய சாதனையை படைத்து 2024 பாரிஸ் பாராலிம்பிஸ் - க்கு தகுதி பெற்றுள்ளார். மேலும் இவர் கடந்த 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியிலும் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது