நவம்பர் 15 அன்று உலக மக்கள்தொகை 800 கோடி - ஐ.நா அறிக்கை

November 14, 2022

நாளை உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது என ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை தினமான கடந்த ஜூலை 11-ந் தேதி வெளியான ஐ.நா. உலக மக்கள்தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறுகையில், 'உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் விஷயம் ஆகும். நமது பொறுப்புகளில் எங்கே […]

நாளை உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது என ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள்தொகை தினமான கடந்த ஜூலை 11-ந் தேதி வெளியான ஐ.நா. உலக மக்கள்தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறுகையில், 'உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் விஷயம் ஆகும். நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்று சிந்திப்பதற்கான நேரமும் இது' என்கிறார்.

2050-ம் ஆண்டு, உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளிலேயே அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடி ஆவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதிலிருந்து 900 கோடி தொடுவதற்கு 15 ஆண்டுகள் ஆகும். ஆக 2037-ல்தான் அந்த 'மைல்கல்'லை எட்டுவோம். ஒட்டுமொத்த உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை இது காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu