உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.
இதுநாள் வரையில் ஜப்பான் நாடு இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து வந்தது. தற்போது, ஜப்பான் நாடு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் வகையில், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் பாஸ்போர்ட் வழங்குகின்றன. இவை மூன்றும் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொள்கின்றன. மூன்றாம் இடத்தில், ஜப்பான், ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 80வது இடத்தில் உள்ளது. இந்தியாவுடன் இணைந்து, செனிகல் மற்றும் டோகோ நாடுகள் 80ம் இடத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்திய பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். இந்த பட்டியலில் பாகிஸ்தான் நூறாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 103 ஆம் இடத்திலும் உள்ளன. 101 ஆம் இடத்தில் சிரியா, மற்றும் 102ஆம் இடத்தில் ஈராக் ஆகிய நாடுகள் உள்ளன. இவை நான்கும் இந்த பட்டியலில் இறுதி இடங்களை வகிக்கின்றன.