சென்னையில், வரும் ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில், உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நடைபெற உள்ளது. இது ஒன்பதாம் ஆண்டு மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 60 நாடுகளில் வசிக்கும் 1500 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் என்று உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாநாட்டிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் உதவி வருவதாக தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இலங்கைத் தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்திய அரசு சார்பில் இனி மேலும் தொடர்ந்து வழங்கப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்கள் விவாதிக்கப்படும் என்று கூறினார்.