உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டிகள் நடந்து வருவதில் இந்திய பெண்கள் அணி ஹங்கேரி அணியை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்றுள்ளது.
தென்கொரியாவின் பூசன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டிகள் நடந்து வருகிறது . இதில் இந்திய அணி ஹங்கேரி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியாவின் மணிகா பத்ரா 3-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஜார்ஜினா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆயிஹிகா முகர்ஜி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இந்திய பெண்கள் அணி ஹங்கேரி அணியை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் ஐந்து பேர் கொண்ட குழுவில் மூன்றாவது இடம் பெற்றுள்ளது. அடுத்த போட்டி உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்டு நாளை விளையாட உள்ளது.