உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் வாகனம் - பஜாஜ் ஆட்டோ அறிமுகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் மோட்டார் சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் இந்த மோட்டார் சைக்கிள், பெட்ரோல் மூலமும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் ஃபிரீடம் 125 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளின் எஞ்சின் திறன் 125சிசி ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், பெட்ரோல் […]

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் மோட்டார் சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் இந்த மோட்டார் சைக்கிள், பெட்ரோல் மூலமும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் ஃபிரீடம் 125 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளின் எஞ்சின் திறன் 125சிசி ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், பெட்ரோல் மோட்டார் சைக்கிள் உடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் 50% குறைவான கார்பன் டை ஆக்சைடு, 75% குறைவான கார்பன் மோனாக்சைடு, 90% குறைவான மீத்தேன் அல்லாத ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றை வெளியிடும் என கூறப்படுகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு மிகவும் உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாகனமாக இது இருக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu