கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு ஓடக்கூடிய வகையிலான மணிக்கூண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. அமேசான் நிறுவனத்தின் தோற்றுநர் ஜெஃப் பெசோஸ் இதனை தயாரித்து வருகிறார்.
டெக்சாஸ் மாகாணத்தில் ஜெஃப் பெசோசுக்கு சொந்தமான பகுதியில் மணிக்கூண்டு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. சுமார் 500 அடி உயரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த மணிக்கூண்டு, 10000 ஆண்டுகளுக்கு ஓடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 350 கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. டேனி எலிஸ் என்ற அறிவியலாளர், ‘கிளாக் ஆப் தி லாங்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மணிக்கூண்டை உருவாக்கி வருகிறார். ஒரு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நகரும் வகையில் இந்த கடிகாரத்தின் நொடி முள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வருடம் என்பது ஒரு நொடியாக அளவிடப்படுகிறது. எனவே, இந்த கடிகாரம் 10000 ஆண்டுகளுக்கு இயங்கவுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இது ஒலி எழுப்பும் என கூறப்பட்டுள்ளது. நீண்ட கால சிந்தனைக்கான நினைவுச் சின்னமாக இது இருக்கும் என கூறப்பட்டுள்ளது.