உலகின் நீளமான ரயில்வே நடைமேடையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 12ம் தேதி திறந்து வைக்கிறார்.
ஹூப்பள்ளி சித்தாரூடா சுவாமிகள் ரயில் நிலையத்தில் ஐந்து நடைமேடை மட்டுமே இருந்தன. இவ்வழியாக வரும் ரயில்கள் சிறிது துாரத்தில் நிறுத்தப்பட்டு அனுமதி கிடைத்த பின்னரே ரயில் நிலையத்துக்கு வருகை தரும். முதல் நடைமேடை 550 மீட்டர் நீளமாக இருந்தது. இது 90 கோடி ரூபாய் செலவில் 10 மீட்டர் அகலம், 1,505 மீட்டர் நீளமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐந்து நடைமேடை இருந்த இந்த ரயில் நிலையம் எட்டு நடைமேடைகளாக அதிகரித்துள்ளது.
மேலும் உலகின் நீளமான நடைமேடை என்ற பெயர் பெற்றிருந்த கோரக்பூர் ரயில் நிலையத்தை பின்னுக்கு தள்ளி ஹூப்பள்ளி சித்தாரூடா சுவாமிகள் ரயில் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. வரும் 12ம் தேதி மாண்டியா வரும் பிரதமர் நரேந்திர மோடி உலகின் நீளமான ரயில்வே நடைமேடையை திறந்து வைக்கிறார்.














