ஹவாய் - கிலோவெயா எரிமலை மீண்டும் சீற்றம்

June 8, 2023

ஹவாயில் உள்ள கிலோவெயா எரிமலை உலக அளவில் துடிப்பாக உள்ள எரிமலைகளுள் ஒன்றாகும். இந்த எரிமலை, கடந்த 3 மாதங்களுக்கு சீற்றமின்றி இருந்தது. தற்போது, நேற்று முதல், மீண்டும் சீறத் தொடங்கியுள்ளது. எரிமலையில் இருந்து, லாவா குழம்புகள் வெளியேறி வருகின்றன. ஒளிரும் பிழம்புகள் காரணமாக, அருகில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்புகள் நேரக்கூடாது என்பதால், அவர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். எரிமலை குழம்புகளின் ஒளிரும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த எரிமலை குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், […]

ஹவாயில் உள்ள கிலோவெயா எரிமலை உலக அளவில் துடிப்பாக உள்ள எரிமலைகளுள் ஒன்றாகும். இந்த எரிமலை, கடந்த 3 மாதங்களுக்கு சீற்றமின்றி இருந்தது. தற்போது, நேற்று முதல், மீண்டும் சீறத் தொடங்கியுள்ளது. எரிமலையில் இருந்து, லாவா குழம்புகள் வெளியேறி வருகின்றன. ஒளிரும் பிழம்புகள் காரணமாக, அருகில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்புகள் நேரக்கூடாது என்பதால், அவர்கள் வெளியேற அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

எரிமலை குழம்புகளின் ஒளிரும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த எரிமலை குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், இந்த எரிமலை சீற்றத்திற்கு முன்னர், பூகம்பம் குறித்த அறிகுறிகள் தென்பட்டதாக கூறியுள்ளனர். பூகம்பம் காரணமாக இந்த சீற்றம் நிகழ்ந்துள்ளதாக கருதுகின்றனர். ஹவாய் -ன் எரிமலை தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் லாவா குழம்புகள் வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானிகள் தொடர்ந்து இந்த பகுதியை கண்காணித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu