உலகின் சக்தி வாய்ந்த எம் ஆர் ஐ கருவி மூலம் மனித மூளை ஸ்கேன் செய்யப்பட்டு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்சைச் சேர்ந்த அட்டாமிக் எனர்ஜி கமிஷன் ஆராய்ச்சியாளர்கள் உலகின் சக்தி வாய்ந்த எம் ஆர் ஐ கருவியை உருவாக்கி உள்ளனர். இந்தக் கருவியை மனிதர்கள் மீது பயன்படுத்த அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக 20 தன்னார்வலர்கள் மீது இந்த எம்ஆர்ஐ கருவி சோதனை செய்யப்பட்டது. இந்த கருவி சாதாரண எம்ஆர்ஐ கருவியை விட 10 மடங்கு கூடுதல் துல்லியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் திறன் 11.7 டெஸ்லா என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை பதிவு செய்யப்பட்ட மனிதனின் மூளை புகைப்படத்தை விட தெளிவான மற்றும் துல்லியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது, நோய் கண்டறிதல் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.