உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 80 ஆவது இடத்தில் நீடித்து வருகிறது.
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்ட சமீபத்திய தர வரிசையில் 194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற பாஸ்போர்ட் முதல் இடத்தை பிடித்து வருகிறது. இந்த பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதல் இடத்தில் உள்ளன. இங்கு உள்ள மக்கள் 194 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை பெற்றுள்ளனர். மேலும் தென்கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் 193 இடங்களுக்கான அணுகல் பெற்று இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து மூன்றாவது இடத்தை பிடித்து 192 இடங்களுக்கு பயணம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 80வது இடத்தையும், சீனா 62வது இடத்தையும், பாகிஸ்தான் 121 வது இடத்தையும் பெற்றுள்ளது.