1 ட்ரில்லியன் குழுவில் இணைந்த என்விடியா - மேலும் பல செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகள் அறிமுகம்

May 29, 2023

சர்வதேச அளவில், சிப் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக என்விடியா அறியப்படுகிறது. இந்த நிறுவனம், கடந்த வார வர்த்தகத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை சந்தித்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 1 ட்ரில்லியன் டாலர்களை தாண்டியது. இதன் மூலம், அமெரிக்காவின் ‘எலைட்’ நிறுவன பட்டியலில் என்விடியா இணைந்துள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், நிறுவனத்தின் மேலும் பல செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை அறிமுகம் செய்தார். “சாட் ஜிபிடியை முன்மாதிரியாக கொண்டு, பல்வேறு […]

சர்வதேச அளவில், சிப் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக என்விடியா அறியப்படுகிறது. இந்த நிறுவனம், கடந்த வார வர்த்தகத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை சந்தித்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக 1 ட்ரில்லியன் டாலர்களை தாண்டியது. இதன் மூலம், அமெரிக்காவின் ‘எலைட்’ நிறுவன பட்டியலில் என்விடியா இணைந்துள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், நிறுவனத்தின் மேலும் பல செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை அறிமுகம் செய்தார்.

“சாட் ஜிபிடியை முன்மாதிரியாக கொண்டு, பல்வேறு எதிர்கால கண்டுபிடிப்புகள் வரவுள்ளன. அவற்றுக்கான செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர் தளமாக DGX GH200 ஐ என்விடியா அறிமுகம் செய்துள்ளது. இது, பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகவும் துணையாக இருக்கும்” என்று ஜென்சன் தெரிவித்துள்ளார். அத்துடன், பல தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து, எதிர்கால செயற்கை நுண்ணறிவு கருவிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், கேமிங் துறையில் புதிய முன்னெடுப்புகளை கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக, புதிய தொழில்நுட்பத்தின் மூலம், மக்கள் வீடியோ கேமை பார்க்கும் விதமே வேறுபடும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu