உலகின் முதல் பணக்காரர் பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு - 200 பில்லியன் டாலரைத் தாண்டியது

April 6, 2023

உலகின் முதல் பணக்காரராக பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். இந்நிலையில், ஆடம்பர பொருட்களை விற்பனை செய்து வரும் அவரது லூயி ஊட்டன் நிறுவனத்தின் பங்குகள் வரலாற்று உயர்வை பதிவு செய்துள்ளன. இதன் விளைவாக, பெர்னாட் அர்னால்டின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. மேலும், 200 பில்லியன் சொத்து மதிப்பை எட்டிய மூன்றாவது நபராக அவர் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே, எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசாஸ் ஆகியோர் 200 பில்லியனை எட்டிய நபர்களாக இடம் […]

உலகின் முதல் பணக்காரராக பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். இந்நிலையில், ஆடம்பர பொருட்களை விற்பனை செய்து வரும் அவரது லூயி ஊட்டன் நிறுவனத்தின் பங்குகள் வரலாற்று உயர்வை பதிவு செய்துள்ளன. இதன் விளைவாக, பெர்னாட் அர்னால்டின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது. மேலும், 200 பில்லியன் சொத்து மதிப்பை எட்டிய மூன்றாவது நபராக அவர் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே, எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசாஸ் ஆகியோர் 200 பில்லியனை எட்டிய நபர்களாக இடம் பெற்றுள்ளனர்.

உலகெங்கும் ஆடம்பர பொருட்களின் விற்பனை கடந்த வருடம் அதிகரித்தது. அதன் விளைவாக, LVMH நிறுவனத்தின் பங்குகள் 30% உயர்வை பதிவு செய்துள்ளன. இதன் காரணமாக, பெர்னாட் அர்னால்டின் சொத்து மதிப்பில் 39 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது. எனவே, செவ்வாய் கிழமை வெளியான ப்ளூம்பெர்க் அறிக்கை படி, அவரது சொத்து மதிப்பு 201 பில்லியன் டாலர்களாக பதிவாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu