போட்ஸ்வானாவில் உள்ள கரோவே வைரச் சுரங்கத்தில், Lucara Diamond Corp நிறுவனத்தால் 2,492 காரட் எடையுள்ள ஒரு மாபெரும் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே இரண்டாவது பெரிய ரத்தின-தர வைரமாக கருதப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு, புகழ்பெற்ற 3,106 காரட் கொண்ட கல்லினன் வைரத்திற்கு அடுத்தபடியாக இடம்பிடித்துள்ளது. வைரத்தின் தரம் மற்றும் மதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இதன் மதிப்பு $40 மில்லியனைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் வைரத்தை மீட்க, லுகாராவின் மேம்பட்ட எக்ஸ்ஆர்டி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. கரோவே சுரங்கம் ஏற்கனவே பல பெரிய வைரங்களை உலகிற்கு அளித்துள்ளது. 2019-ல் கண்டுபிடிக்கப்பட்ட 1,758 காரட் வைரத்தை லூயிஸ் உய்ட்டன் நிறுவனம் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.