உலகின் பணக்கார நகரங்கள் பட்டியல் வெளியீடு - நியூயார்க் முதலிடம்

April 19, 2023

ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம், அண்மையில் உலகின் பணக்கார நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 58 கோடீஸ்வரர்களைக் கொண்ட நியூயார்க் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. நியூயார்க்கை தொடர்ந்து, டோக்கியோ மற்றும் தி பே ஏரியா நகரங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. லண்டன் நகரம் நான்காம் இடத்திலும், சிங்கப்பூர் நகரம் ஐந்தாம் இடத்திலும் உள்ளன. சீனாவில் இருந்து பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் பத்தாம் […]

ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம், அண்மையில் உலகின் பணக்கார நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 58 கோடீஸ்வரர்களைக் கொண்ட நியூயார்க் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. நியூயார்க்கை தொடர்ந்து, டோக்கியோ மற்றும் தி பே ஏரியா நகரங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. லண்டன் நகரம் நான்காம் இடத்திலும், சிங்கப்பூர் நகரம் ஐந்தாம் இடத்திலும் உள்ளன. சீனாவில் இருந்து பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் பத்தாம் இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் இருந்து, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. தனிநபர் ஒருவரின் முதலீட்டு வருமானம் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மும்பையில் 59400 பேர் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேலான முதலீட்டு வருமானம் உள்ளவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். டில்லியில் 16 கோடீஸ்வரர்களும், பெங்களூருவில் 8 கோடீஸ்வரர்களும், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் 5 மற்றும் 7 கோடீஸ்வரர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu