இந்திய மாநிலங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி கூடுதல் வெப்பம்

September 8, 2023

பல்வேறு இந்திய மாநிலங்களில், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், வழக்கத்தை விட 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 60 நாட்களுக்கும் மேலாக இந்த வெப்பநிலை உயர்வு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காலநிலை மாற்றக் குறியீடு (Climate Shift Index) மாற்றம் அடைந்துள்ளதாக கிளைமேட் சென்ட்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் 98% பேர் வெப்பநிலை உயர்வை அனுபவித்துள்ளதாக கிளைமேட் சென்ட்ரல் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2023 ஆம் ஆண்டின் […]

பல்வேறு இந்திய மாநிலங்களில், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், வழக்கத்தை விட 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 60 நாட்களுக்கும் மேலாக இந்த வெப்பநிலை உயர்வு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காலநிலை மாற்றக் குறியீடு (Climate Shift Index) மாற்றம் அடைந்துள்ளதாக கிளைமேட் சென்ட்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 98% பேர் வெப்பநிலை உயர்வை அனுபவித்துள்ளதாக கிளைமேட் சென்ட்ரல் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2023 ஆம் ஆண்டின் ஜூன் முதல் ஆகஸ்ட் காலகட்டம், வரலாற்றில் வெப்பமான கோடை காலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில், கேரளா, புதுச்சேரி, மேகாலயா, கோவா மற்றும் அந்தமானில் 3 டிகிரி வரை வெப்பநிலை உயர்வு உணரப்பட்டுள்ளது. இவை தவிர, இந்தியாவின் பிற மாநிலங்களில் வழக்கத்தை விட ஒரு டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu