கடந்த மார்ச் மாதத்தில், இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 1.34% ஆக பதிவாகியுள்ளது. இது, கடந்த 29 மாதங்களில் பதிவான மிகக் குறைந்த அளவாகும். உணவுப் பொருள் விலைகள் உயர்ந்த போதும், உற்பத்தி மற்றும் எரிபொருள் சார்ந்த மூலப் பொருட்களின் விலை குறைந்ததால், மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாக 10 மாதங்களுக்கு, மொத்த விலை பணவீக்கம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 3.85% ஆக இருந்தது. இது, மார்ச் மாதத்தில், கிட்டத்தட்ட பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வருட மார்ச் மாதத்தில், 14.63% அளவில் மொத்த விலை பணவீக்கம் பதிவாகி இருந்தது. எனினும், தற்போது, உணவுப் பொருட்கள் சார்ந்த மொத்த விலை பணவீக்கம் உயர்ந்தே காணப்படுகிறது. ஆனால், உற்பத்தி மற்றும் எரிபொருள் சார்ந்த பணவீக்கம் குறைந்துள்ளது.