கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம், 2 வருட குறைவான அளவில் பதிவாகியுள்ளது. உற்பத்தி செலவுகள் பெருமளவு குறைந்ததால், பொருட்களின் விலைகள் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில், 3.85% ஆக மொத்த விலை பணவீக்கம் பதிவாகியுள்ளது. இது முந்தைய மாதத்தில் 4.73% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஜனவரி மாதத்தில், 2.51% ஆக பதிவான மொத்த விலை பணவீக்கம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு குறைவான பதிவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதத்தில், உணவு விலை குறியீட்டு எண் 2.76% ஆக பதிவாகியுள்ளது. அதே வேளையில், எரிபொருள் மற்றும் எரிசக்தி துறை சார்ந்த குறியீட்டு எண் 14.82% ஆக பதிவாகியுள்ளது. இவை, முந்தைய ஆண்டில், முறையே, 2.95% மற்றும் 15.15% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.