பதக்கங்களை கங்கையில் வீச முடிவு - மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பாஜக எம் பி யும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்யக்கோரி, மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி வீராங்கனைகள் சென்ற போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை காரணம் காட்டி, அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து, […]

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பாஜக எம் பி யும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்யக்கோரி, மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி வீராங்கனைகள் சென்ற போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை காரணம் காட்டி, அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

தொடர்ந்து, வீரர்களின் போராட்டத்திற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர்கள் இன்று மாலை 6 மணிக்கு, ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் அவர்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீச திட்டமிட்டுள்ளனர். ஹரித்வாருக்கு சென்று, அவர்களின் உயிர் போல கருதப்படும் பதக்கங்களை வீச உள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, இந்தியா கேட் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். “நாங்கள் பெற்ற பதக்கங்கள் தான் எங்கள் உயிர். அவற்றை ஆற்றில் வீசி விட்டு நாங்கள் உயிர் வாழ்வதில் அர்த்தம் இல்லை. எனவே, சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu