இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது விசாரணை நடந்துவரும் நிலையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிஜ் பூஷண் சரண் சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பியும் ஆவார். இவர் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் பதவி விலக வேண்டுமென வீரர்- வீராங்கனைகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்களின் போராட்டத்தை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஜூலை 11-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அசாம் மல்யுத்த சங்கம் தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்க உரிமை கோரியதால் கவுகாத்தி ஐகோர்ட் தேர்தலுக்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது சுப்ரீம் கோர்ட் - கவுகாத்தி ஐகோர்ட்டின் உத்தரவை தடை செய்துள்ளது. இதனால் 4,6,11 ம் தேதிகளில் தள்ளி வைக்கப்பட்ட தேர்தல் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














