பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் ஜாங் கின்வென் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், உலகின் டாப்-8 வீராங்கனைகளின் மத்தியில் சவுதி அரேபியாவில் பரபரப்பான போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த ஆட்டத்தில், ஒலிம்பிக் சாம்பியன் ஜாங் கின்வென் (சீனா) 6-1, 6-1 என ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். ஒரு வெற்றியுடன், 2 தோல்விகளை சந்தித்த பாவ்லினி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.