ஆப்பிள் நிறுவனம், ‘சிப்புகளின் ராட்சசன்’ என்ற பெயரில் M2 அல்ட்ரா சிப்பை அறிமுகம் செய்துள்ளது. நேற்று நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் இந்த சிப் வெளியிடப்பட்டது. இந்த சிப் மூலம், கணினியில் உள்ள சிபியு வின் செயல் திறன் 20% உயரும் எனவும், ஜிபியு வின் செயல் திறன் 30% உயரும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த சிப்பில் 192 ஜிபி மெமரி திறன் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் தொழில்நுட்ப பிரிவின் மூத்த அதிகாரி ஜானி சுரோஜி, “உலகின் மிகவும் வலிமையான சிப்பாக M2 அல்ட்ரா இருக்கும். M2 அல்ட்ரா சிப், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் ஸ்டுடியோ, மேக் ப்ரோ ஆகியவற்றில் பயன்படுத்தப்படும். இதன் விலை 7000 டாலர்கள் அளவில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.