ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் உலக டெவலப்பர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான மாநாடு ஜூன் 10ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனங்கள் பற்றிய முன்னோட்டம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டுக்கான உலக டெவலப்பர்கள் மாநாட்டில், ஆப்பிள் நிறுவனம் சார்பில் பல்வேறு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஐ ஓ எஸ் 18, ஐ பேட் ஒ எஸ் 18, மேக் ஓ எஸ் 15, டிவி ஓ எஸ் 18, வாட்ச் ஓ எஸ் 11, விஷன் ஓ எஸ் 2 ஆகியவை பற்றிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் உலக டெவலப்பர்கள் மாநாடு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.