எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால் அம்சங்கள் கொண்டுவரப்படுவதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த அம்சம் எப்போது வெளியாகும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
எலான் மஸ்க் தெரிவித்துள்ளபடி, எக்ஸ் தளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் மேற்கொள்ள கைபேசி எண் தேவையில்லை. மேலும், இது, ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, மேக், விண்டோஸ் என அனைத்து இயங்கு தளங்களிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான எலான் மஸ்கின் எக்ஸ் பதிவில், ‘இந்த புதிய அம்சம் சர்வதேச முகவரி புத்தகமாக விளங்கக் கூடிய வகையில் இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.