எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரபலமான பயனர்களுக்கு சலுகை அறிவித்துள்ளார் அதன் தலைவர் எலன் மஸ்க்.
எக்ஸ் வலைதள பக்கத்தில் உலக அளவில் பல்வேறு துறைகளில் உள்ள பிரபலமான பயனர்கள் பலர் கணக்குகள் தொடங்கி தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அவற்றில் போலி கணக்குகளை கண்டுபிடிக்கும் வகையில் பிரபலமான பயனர்களுக்கு ப்ளூ டிக் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அவர்கள் தனியாக சந்தா தொகை செலுத்த வேண்டும். இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் சில ப்ளூ டிக் பயனாளர்களுக்கு எலன் மஸ்க் இலவச சலுகை வழங்கியுள்ளார். அந்த வகையில் கட்டணம் செலுத்தாத சிலருக்கு ப்ளூ டிக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2500 பிரபல பயனாளர்கள் இந்த சலுகையை பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.