கருந்துளையில் இருந்து எக்ஸ் கதிர்கள் வெளியேறுவதாக இஸ்ரோவின் அஸ்ட்ரோசாட் கண்டுபிடிப்பு

கருந்துளைகளில் இருந்து அதிக ஆற்றல் மிக்க எக்ஸ் கதிர்கள் வெளியேறுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 2015ல் செலுத்தப்பட்ட அஸ்ட்ரோசாட் விண்கலம் அனுப்பிய தரவுகளின் அடிப்படையில் இதனை தெரிவித்துள்ளது. விண்வெளியில் உள்ள விண்மீன் கூட்டங்களின் செயல்பாடு, புற ஊதாக் கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் போன்றவற்றை ஆராய்வதற்காக அஸ்ட்ரோசாட் என்ற விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. கடந்த 9 ஆண்டுகளாக, அஸ்ட்ரோசாட் பல்வேறு புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்கள் மற்றும் தரவுகளை ஆய்வு செய்த யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் […]

கருந்துளைகளில் இருந்து அதிக ஆற்றல் மிக்க எக்ஸ் கதிர்கள் வெளியேறுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 2015ல் செலுத்தப்பட்ட அஸ்ட்ரோசாட் விண்கலம் அனுப்பிய தரவுகளின் அடிப்படையில் இதனை தெரிவித்துள்ளது.

விண்வெளியில் உள்ள விண்மீன் கூட்டங்களின் செயல்பாடு, புற ஊதாக் கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் போன்றவற்றை ஆராய்வதற்காக அஸ்ட்ரோசாட் என்ற விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. கடந்த 9 ஆண்டுகளாக, அஸ்ட்ரோசாட் பல்வேறு புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்கள் மற்றும் தரவுகளை ஆய்வு செய்த யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம், மும்பை பல்கலைக்கழகம், கௌஹாத்தி ஐஐடி மற்றும் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், சீரற்ற நிலையில் கருந்துளையில் இருந்து ஆற்றல் மிக்க எக்ஸ் கதிர்கள் வெளியாவது கண்டறியப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் ஜே 1727.8-1613 என்று குறிக்கப்படும் கருந்துளை பகுதியில் இருந்து இந்த கதிர்கள் வெளியாவதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த கருந்துளையில் இருந்து கடந்த செப்டம்பர் 8 முதல் 13-ஆம் தேதி வரையில் 1.4 முதல் 2.4 ஹெர்ட்ஸ் வரையிலான சீரற்ற எக்ஸ் போட்டான் கதிர்கள் வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu